|
இணையத்தில்
கிடைக்கும் பயனுள்ள செயலிகள்
|
|||
|
ஆனால் எம்மவர்களில் சிலர் பல மின்னஞ்சல் முகவரிகளை அஞ்சல் சேவை வழங்குநர்களிடம் (Aol, Hotmail, Yahoo, Earthlink, Email.com, iName, Mail.com, Mindspring, MSN, POP3, OneBox, Rediffmail, Switchboard, USA.net etc...) வைத்திருக்கிறர்கள். அவர்கள் தங்களுக்கு கடிதம் வந்திருக்கின்றதா என்று பார்க்க வேண்டுமானால் அஞ்சல் சேவை வழங்குநர்களின் இணையதளத்திற்கு சென்று அங்கு தங்களுடைய பெயரையும் கடவுச்சொல்லையும் வழங்கி மின்னஞ்சல்களை வாசிப்பார்கள். இவ்வாறு பல முகவரிகளை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு தடவையும் வெவ்வேறுபட்ட அஞ்சல் சேவை வழங்குநர்களின் இணையதளத்திற்கு சென்றுதான் மின்னஞ்சல்களை பார்க்ககூடியதாக இருக்கும். இதில் நேரவிரயம் ஏற்படுகிறது. Eprompter என்ற இலவச மென்பொருள் மூலம் ஒரேநேரத்தில், ஒரு சிறிய சாளரத்தில் இருந்துகொண்டே, பல மின்னஞ்சல் முகவரிகளின் பெட்டியை திறந்து பார்க்ககூடியதாக இருக்கும். அஞ்சல் சேவை வழங்குநர்களின் இணையதளத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவ்வாறு குறுகிய நேரத்தில் கடிதங்களை பார்வையிடுவதுடன் மட்டுமல்லாது, அழையாஅஞ்சல்களையும் (spam) சந்தேகத்திற்கிடமான மின்மடல்களையும் அழிக்ககூடியதாக இருக்கும். |
|||